முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா
வடமதுரையில் முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா வந்தார்.
திண்டுக்கல்
வடமதுரையில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஒவ்வொரு நாளும் சிம்மம், கருடன், சேஷன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் வீதி உலா வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெருமாள் வசந்தம் முத்துப்பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா வந்தார். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். அதன்பின்னர் நேற்று காலை பெருமாள் கோவில் வந்து அடைந்தார்.
Related Tags :
Next Story