தேன்கனிக்கோட்டையில்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்


தேன்கனிக்கோட்டையில்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன பென்னங்கூர் காய்கறி மார்க்கெட் அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கைகளில் கரும்புடன் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story