பணியை புறக்கணித்து தொழிலாளர்கள் போராட்டம்
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முறைகேடு புகார் கூறி பணியை புறக்கணித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி
ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் நேற்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வழங்கப்படும் 100 நாள் வேலை, பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. ஆண்டிற்கு 15 முதல் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடு நடக்கிறது என்று புகார் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொழிலாளர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story