சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x

உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்


உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி, முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் உடுமலை ஒன்றிய தலைவர் ஜெ.எலிசபெத் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.ஆனந்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் கே.வெங்கிடுசாமி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் எம்.தெண்டபாணி, தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை தலைவர் தாசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் டி.வைரமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் டி.புஷ்பவள்ளி நிறைவுரையாற்றினார்.

 உடுமலை ஒன்றிய பொருளாளர் எஸ்.ஷகிலாபானு நன்றி கூறினார்.


Related Tags :
Next Story