ஈரோட்டில் தேசியக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு
ஈரோட்டில் தேசியக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு
ஈரோடு
ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி 7-வது விதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 39). அதேபகுதியில் வளர்ப்பு பிராணிகள் கடை (பெட்ஷாப்) வைத்து நடத்தி வருகிறார். சாந்தகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் நேற்று காலை சாந்தகுமார் கையில் தேசியக்கொடியுடன் வந்தார். பின்னர் அவர் திடீரென சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறி கழுத்தில் ஒரு பதாகையை தொங்க விட்டு, தரையில் உட்கார்ந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார், அங்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறிஉள்ளார். இதையடுத்து, பொது இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறிய போலீசார், அவருக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.
ஈரோட்டில் தேசியக்கொடியுடன் சாந்தகுமார் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.