கண்களில் கருப்பு துணி கட்டி தே.மு.தி.க. கவுன்சிலர்கள் போராட்டம்


கண்களில் கருப்பு துணி கட்டி தே.மு.தி.க. கவுன்சிலர்கள் போராட்டம்
x

பென்னாகரம் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டி தே.மு.தி.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டி தே.மு.தி.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதாந்திர கூட்டம்

பென்னாகரம் பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வீரமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. செயல் அலுவலர் கீதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. கவுன்சிலர்கள் குமார், பொன்னழகி ஆகியோர் தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறி கூட்டத்தை புறக்கணித்தனர். தொடர்ந்து அவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்களுடன் காலிக்குடங்களுடன் தரையில் அமர்ந்து கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி தலைவர் வீரமணி உறுதியளித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story