ஊராட்சி செயலாளர்கள் 275 பேர் ஊதியமில்லா விடுப்பு போராட்டம்


ஊராட்சி செயலாளர்கள் 275 பேர் ஊதியமில்லா விடுப்பு போராட்டம்
x

மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் 275 பேர் ஊதியமில்லா விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை

இளையான்குடி,

மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் 275 பேர் ஊதியமில்லா விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3 நாட்கள் போராட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சிவகங்கை மாவட்டம் சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி செயலாளர்கள் ஊதியமில்லா விடுப்பு எடுத்து 12, 13, 14 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து மாவட்ட தலைவர் பாக்யராஜ், மாவட்ட செயலாளர் ஜெயபாண்டியன், பொருளாளர் மாரிமுத்து, மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா ஆகியோர் கூறியதாவது:-

ஊராட்சி செயலாளர்கள் இதுவரை இல்லாத அளவில் பணி அழுத்தங்களை சந்தித்தும், ஒரே பணியாளர் ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது. இதனால் ஊராட்சி செயலர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஊராட்சி செயலரின் உடல்நலம், மனநலம் காக்க நடவடிக்கை தேவை.

பல்வேறு கோரிக்கை

இப்போதுள்ள பணி நெருக்கடியை அரசு முற்றிலும் குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி தலைவர்கள் ஊதியம் அனுமதிப்பதில் தாமதம் செய்கின்றனர். பல ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி செயலருக்கு ஊதியம் அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டுகின்றனர். ஊராட்சி செயலாளர்களின் நெடுங்கால கோரிக்கையான கருவூலம் மூலம் ஊதியம் பெறும் வகையில் உடனடி உத்தரவினை பிறப்பிக்க வேண்டும். மாத ஊதியம் பெறுவதினை உறுதி செய்ய வேண்டும். காலி பணியிடங்களை அரசு தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்.

புதிய பணி விதிகள் அரசாணையை வெளியிடுதல், ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல், பென்ஷன் திட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தமிழகத்தின் பணியில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளரும் ஊதியமில்லா விடுப்பை எடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 275 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story