ஈரோட்டில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஈரோட்டில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

ஈரோடு

அகில இந்திய ரெயில்வே ஓடும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், ஈரோடு ரெயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார்.

ரெயில்வே துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரெயில் என்ஜின் டிரைவர்கள் பணி மாறுதல், விடுப்பு எடுக்க ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும். ரெயில் டிரைவர்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் உள்ள பணிகளை நிறுத்த வேண்டும். பெண் டிரைவர்களுக்கு அடிப்படை வசதிகளான தனி கழிப்பறை, தனி தங்கும் அறை வழங்க வேண்டும். 36 மணி நேரத்திற்குள் பணி ஓய்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story