மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு மின்சா வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

மின்சார ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். துணை மின் நிலையங்கள் மற்றும் சில பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். மறு பகிர்வு முறையை கைவிட வேண்டும், பஞ்சப்படி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டம் தொடரும்

இதில் தர்மபுரி மாவட்டத்தில் மின் பகிர்மான வட்டத்தில் பணிபுரியும் 18 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள், தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் வேலையை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழக அரசு தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.


Next Story