ஈரோட்டில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்


ஈரோட்டில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2022 3:18 AM IST (Updated: 12 Oct 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

ஈரோடு

ஈரோட்டில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

மனிதசங்கிலி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யக்கோரியும், தமிழகத்தில் மதவாத, வகுப்புவாத, பிரிவினைவாத சக்திகளை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று மனிதசங்கிலி நடந்தது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நேற்று மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் திரண்டனர். இந்த மனிதசங்கிலி போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறியாளர் அணி மாநில துணைச்செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமை தாங்கினார். ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீண்ட வரிசை

இதில் பல்வேறு கட்சியினர் ஈரோடு காந்திஜிரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப்ரோடு) ஆகிய சாலைகளில் நீண்ட வரிசையாக ஒருவரையொருவர் கைகோர்த்தபடி நீண்ட வரிசையில் நின்றார்கள். இந்த மனிதசங்கிலியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், மாவட்ட செயலாளர் மக்கள் ஜி.ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, வக்கீல் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர்சாதிக், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ்ராஜப்பா, நிர்வாகிகள் பாட்ஷா, முகமது அர்ஷத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மவாட்ட துணைச்செயலாளர்கள் அக்பர் அலி, நிர்வாகிகள் ஆல்ட்ரின், பைஜூல் அகமது, அம்ஜத்கான், ஜாபர் அலி, தொகுதி செயலாளர் மதிவாணன், மாவட்ட அமைப்பாளர்கள் செந்தமிழ் வளவன், நடராஜன், ஒன்றிய செயலாளர் சரண் உள்ளிட்டோரும் நீண்ட வரிசையில் கைகோர்த்தபடி நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பிரபாகரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுராமன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொறுப்பாளர் சித்திக், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட அமைப்பாளர் ஜெ.கோபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி ஆரிப், எஸ்.டி.பி.ஐ. பொறுப்பாளர் லுக்மான் மற்றும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story