கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு

அந்தியூர்

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டம்

அந்தியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் முனுசாமி, விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினார்கள்.

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு 2019-ம் ஆண்டுக்குப் பின்னர் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. மாடுகளின் தீவனமான தவுடு, பருத்தி கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம் என அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டன.

பணி பாதுகாப்பு

எனவே ஒரு லிட்டர் பசும்பாலை ரூ.42-க்கும், எருமை பாலை ரூ.51-க்கும் கொள்முதல் செய்யவேண்டும். பால் பணம் பாக்கி, ஊக்கத்தொகை, போனஸ் உள்ளிட்டவற்றை தீபாவளிக்கு முன்பாக வழங்கிட வேண்டும். ஆவின் கலப்பு தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். கோஷமும் எழுப்பப்பட்டது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ரத்தினம் மற்றும் முருகேசன், பழனிசாமி உள்பட பால் உற்பத்தியாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


Next Story