லாரி டிரைவர் சாலையில் படுத்து திடீர் போராட்டம்
தர்மபுரி அரசு மருத்துவமனை முன்பு லாரி டிரைவர் சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தர்மபுரி அரசு மருத்துவமனை முன்பு லாரி டிரைவர் சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
லாரி டிரைவர்
தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்தவர் லாரி டிரைவர் வீரமணி (வயது44). இவருக்கும், உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிக்கும் பூர்வீக சொத்தை பிரித்து கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் பூர்வீகம் சொத்து தர மறுத்து, வீரமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்து வீரமணி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று மாலை வீரமணி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அவர் திடீரென அரசு மருத்துவமனை முன்பு சாலையில் தனியார் பஸ் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரை, சாலையில் இருந்து அப்புரப்படுத்தி விசாரணை நடத்தினர்.
சமாதானம்
அப்போது அவர் கூறுகையில், பூர்வீக சொத்தை பிரித்து தராமல், தன்னை தாக்கியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பூர்வீக சொத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை பெற்று தரவேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் கட்டுடன் லாரி டிரைவர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.