காரைக்குடியில் முற்றுகை போராட்டம்


காரைக்குடியில் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:17:12+05:30)

காரைக்குடியில் முற்றுகை போராட்டம் நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் காரைக்குடி அரசு போக்குவரத்து கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நீதி மன்ற உத்தரவின்படி அகவிலைபடியை உயர்த்தி வழங்க வேண்டும், பணி ஓய்வு, தன் விருப்ப பணி ஓய்வு, மரணமடைந்த தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வு பெற்ற நல அமைப்பு பொது துணை செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. சங்க பொதுச்செயலாளர் தெய்வவீரபாண்டியன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை சி.ஐ.டி.யு. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிவாஜி தொடங்கி வைத்தார். இதில் ஓய்வு பெற்றவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story