ஊரக வளர்ச்சித்துறையினர் 2 நாள் விடுப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறையினர் 2 நாள் விடுப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறையினர் 2 நாள் விடுப்பு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஏற்கனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னரும்கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் மாநிலம் முழுவதும் 2 நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அனைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை நாட்கள், இரவு நேர ஆய்வுகள், ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வரும் 387 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், திட்ட இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களின் அன்றாட பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநிலதணிக்கையாளரும் மாவட்ட செயலாளருமான சோமசுந்தர் ஆகியோர் கூறியதாவது:- அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் முதல்கட்டமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது 2 நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன்பின்னரும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் டிசம்பர் 14-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் மாநில அளவில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு கூறினர்.


Next Story