ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்
x

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனம் சார்பில் அவுட்சோர்சிங் முறையில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.315-ம், செக்யூரிட்டி பணிக்கு ரூ.280-ம் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கூலியை உயர்த்தி வழங்கக்கோரி, ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று மாலை ஒப்பந்த பணியாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 'நாங்கள் கூலி உயர்வு கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. கலெக்டர் அறிவித்த கூலியைக்கூட தரமறுக்கின்றனர். இதுவரை எந்த அதிகாரிகளும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவரவில்லை. எங்களுக்கு கூலி உயர்வு வழங்கினால் மட்டுமே நாங்கள் இந்த இடத்தைவிட்டு கலைந்து செல்வோம். அதுவரை எங்கள் போராட்டம் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடரும்' என்றனர். ஒப்பந்த பணியாளர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக தூய்மை பணி பாதிக்கப்பட்டது.


Next Story