கிராம மக்கள் போராட்டம்


கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே சப்படி என்ற கிராமத்தில் 5 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல் குவாரிகள், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன. இந்த குவாரிகளில் அதிகளவில் வெடி வைப்பதால், நில அதிர்வால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள குடிநீரும் மாசடைந்துள்ளது. இந்த தண்ணீரை குடித்து கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தினமும் சப்படி கிராமத்திற்குள் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்வதால், சாலைகள் சேதமடைந்தது.

இந்தநிலையில் நேற்று கிராம மக்கள் கல்குவாரிகளை மூட கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குவாரிகளுக்கு சென்ற லாரிகளை அவர்கள் சிறைபிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி தாசில்தார் அனிதா மற்றும் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story