சத்தியமங்கலத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை ஈரோடு வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்கு கண்டன தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஹசின்காமினூன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சமீருல்லா வரவேற்று பேசினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் கலந்துகொண்டு பேசினார். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ஷேக் மொய்தீன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஸ்ரீராம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
Related Tags :
Next Story