அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தை இறந்தது தொடர்பாக அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூர் அருகே பேகேபள்ளியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியா(வயது22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த பச்சிளம் குழந்தை திடீரென இறந்தது. இதனிடையே நேற்று அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து நேற்று அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், நகரமைப்பு குழு தலைவர் அசோகா, வெங்கடசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன், ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story