கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண்கள் போராட்டம்


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகார் அளித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

உத்தனப்பள்ளி அடுத்த அகரம் முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர்களிடையே நிலப்பிரச்சினை இருந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிலம்பரசன், இவரது மனைவி, அவரது தம்பி மனைவி மற்றும் 2 வயது குழந்தையையும் ரமேஷ் தரப்பினர் தாக்கியதாக உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் போலீசார், புகார் அளித்த சிலம்பரசன், அவரது மனைவி தனலட்சுமி, உறவினர் தண்டபாணி, தம்பி மனைவி அனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சிலம்பரசன் தரப்பினர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களை உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story