மயானத்திற்கு இடம் கேட்டு போராட முயன்ற பொதுமக்கள்
மயானத்திற்கு இடம் கேட்டு போராட முயன்ற பொதுமக்கள்
அவினாசி,
அவினாசி ஒன்றியம் நம்பியம்பாளையம் ஊராட்சி ஏ.டி. காலனியைச் சேர்ந்த மக்கள் அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் அந்த இடத்தை அளவீடு செய்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டார். இதை அறிந்த ஏ.டி. காலனி மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பட்டா நிலம் என்று கூறி இறந்தவரின் உடலை புதைக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். எனவே எங்களுக்கு மயானத்திற்கு வேறு இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் கூறுகயில் நல்லாற்று ஓடை மேல் பகுதியில் உள்ள 1.08 ஏக்கர் இடத்தை மயானமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிப்பதாக தெரிவித்தனர். ஆனால் அப்பகுதி மக்கள் தனி நபரின் பட்டா இடத்தில் மயானத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் வேண்டும் என்றனர். இது பற்றி தாரிலதாரிடம் அறிக்கை அளிக்க வருவாய்துறையினர் முடிவு செய்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-----
----
Reporter : S. Thirungnanasampandam Location : Tirupur - Avinashi