மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிக்கான நிதியை குறைத்ததை கண்டித்து முதுகுளத்தூர் தபால் நிலையம் அருகில் போராட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் சங்க தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். செயலளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விவசாய சங்க நிர்வாகிகள் முருகன், கணேசன் ஆகியோர் பேசினர்.

இதில், மயில்சாமி, தங்கப்பாண்டி, மாவட்ட துணை தலைவர் முத்துராமலிங்கம், கமுதி தாலுகா தலைவர் சந்திரன், செயலாளர் ஸ்டாலின் முத்துமாணிக்கம், பொருளாளர் மற்றும் சின்ன கருப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story