பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தொடர் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தொடர் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தொடர் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தொடர் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.

உயர்மட்ட குழு கூட்டம்

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், மகேஸ்வரன், நாகராஜ், ராம்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் உறுப்பு சங்கங்களின் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் சிவக்குமார், கோவிந்தராஜ், செல்வக்குமார், பாண்டியராஜன், டேவிட் அற்புதம், புரட்சித்தம்பி, மலைராஜ், உதயக்குமார், முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுநிலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதை கைவிடவேண்டும், தொகுப்பூதிய நியமனத்தை ரத்து செய்தல், சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி மாவட்ட தலைநகரில் ஆயத்த மாநாடு நடத்துவது என்றும், மார்ச் 5-ந் தேதி மாவட்ட தலைநகரில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்கும் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வது என்றும், மார்ச் 24-ந் தேதி வட்டார தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story