மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்
கடலாடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
கடலாடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் நவநீதகிருஷ்ணன், விவசாய சங்க தாலுகா தலைவர் குருசாமி, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியதை கண்டித்தும், விவசாய உர மானியத்தை குறைத்து வழங்குவதை கண்டித்தும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதில், விவசாய சங்க செயலாளர்கள் தங்கச்சாமி, அங்குதன், சி.பி.எம். தாலுகா செயலாளர்கள் முத்துச்சாமி, முதுகுளத்தூர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story