விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்
உத்தனப்பள்ளியில் 5-வது சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க 3,800 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று 46-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story