நம்பியூர் அருகே பரபரப்பு வேகமாக சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு


நம்பியூர் அருகே பரபரப்பு வேகமாக சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு
x

நம்பியூர் அருகே வேகமாக சென்ற லாரியை பொதுமக்கள் சிைற பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே வேகமாக சென்ற லாரியை பொதுமக்கள் சிைற பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறைபிடிப்பு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பனங்காட்டுபாளையத்தில் இருந்து கிராவல் மண் ஏற்றிய லாரி ஒன்று நம்பியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பனங்காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து லாரியை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அஞ்சனூர் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, நில வருவாய் அலுவலர் ராஜாமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் லாரி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்

பறிமுதல்

விசாரணையில் லாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மண் பாரம் ஏற்றி சென்றதும், அதற்கு முறயான ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், 'கிராவல் மண் ஏற்றி செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. மேலும் சில லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பாரம் ஏற்றி செல்கிறது. எனவே லாரி வேகமாக செல்லக்கூடாது. நி்ாணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக கிராவல் மண் ஏற்றி செல்லக்கூடாது. அதுமட்டுமின்றி எங்கள் பகுதியில் குவாரி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது,' என்றனர்.

இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நம்பியூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்ெகாண்டு வருகிறார்கள்.Next Story