பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்தது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், மகேஸ்வரன், நாகராஜ், ராம்குமார் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் உறுப்பு சங்கங்களின் மாவட்ட உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் ஆரோக்கியராஜ், செல்வக்குமார், ஜான்பீட்டர், முத்துச்சாமி, பீட்டர், நரசிம்மன், பூமிநாதன், வெங்கடாசலபதி, சேகர், வினோத்குமார், புரட்சித்தம்பி, டேவிட் அற்புதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுநிலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 19-ந்தேதி மாவட்ட தலைநகரில் ஆயத்த மாநாடு நடத்தப்பட்டது,கடந்த 5 தேதி மாவட்ட தலைநகரில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது, இந்நிலையில் தமிழ்நாடு அரசு கோரிக்கைகள் குறித்து எவ்வித முடிவும் எடுக்காத நிலையில் வருகிற 24-ந் தேதி மாநிலம் முழுவதும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துவது என என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.