நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பேராசிரியர்கள் தர்ணா போராட்டம்


நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பேராசிரியர்கள் தர்ணா போராட்டம்
x
நாமக்கல்

நாமக்கல்லில் திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக பால் கிரேஸ் இருந்து வருகிறார். முதல்வர் பால் கிரேஸ், பேராசிரியர்களை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொள்வதால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், எனவே முதல்வர் பால் கிரேஸை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியும் பேராசிரியர்கள் கல்லூரி நுழைவு வாயில் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளுக்கு 3 நாட்களுக்கு முன்பு வழங்க வேண்டிய ஹால் டிக்கெட்டை, தேர்வுக்கு முதல் நாள் தான் வழங்க வேண்டும் என முதல்வர் நிர்பந்திப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர். அதனால் மாணவிகளும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story