சூளகிரியில் மயான பாதை வசதி கோரி மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்


சூளகிரியில் மயான பாதை வசதி கோரி மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 July 2023 1:15 AM IST (Updated: 1 July 2023 8:20 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரியில் மயான பாதை வசதி கோரி மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயான பாதை வசதி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கீழ்த்தெருவில் வசித்து வரும் பொதுமக்கள், மயான பாதை அமைத்து தரக்கோரி நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் பாதை வசதி கோரி உறவினர்கள் மூதாட்டியின் சடலத்தை ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் பள்ளி அருகேயுள்ள மேம்பாலத்தில் நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் தாசில்தார் பன்னீர்செல்வி ஆகியோர் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு மாதத்தில் தீர்வு

அப்போது ஒரு மாதத்திற்குள் மயான பாதை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், போலீசார் மூதாட்டியின் உடலை 3 கி.மீ. தூரம் மயானத்திற்கு சுமந்து சென்றனர். அங்கு மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story