சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதித்தால் போராட்டம்


சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதித்தால்  போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதித்தால் போராட்டம் நடத்தப்படும் என்று 11 மாவட்ட மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை

பொறையாறு:

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதித்தால் போராட்டம் நடத்தப்படும் என்று 11 மாவட்ட மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவசர ஆலோசனை கூட்டம்

சில நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் என சுப்ரீம்கோர்ட்டு தனது இடைக்கால தீர்ப்பில் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் 11 மாவட்டங்களை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான அவசர ஆலோசனை கூட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்றது. கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகை காரைக்கால், கடலூர், புதுச்சேரி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார்கள், நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக 11 மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் தூத்துக்குடி கயாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு

கூட்டத்தில், சுருக்கு மடி வலை, இரட்டை மடிவலை, அதிவேக குதிரை திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகு இந்த மூன்றையும் நிரந்தரமாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும். சிறு, குறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டால் அனைத்து மீனவ கிராமங்களின் சார்பிலும், தொழில் மறியல் செய்து மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

மீன்பிடி தொழிலில் சுருக்குமடி வலை பயன்பாட்டை அனுமதிக்கும் சூழ்நிலை உருவாகுமே ஆனால் அதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story