குடிநீர் வழங்க வலியுறுத்தி போராட்டம்


குடிநீர் வழங்க வலியுறுத்தி போராட்டம்
x

ராஜபாளையத்தில் குடிநீர் வழங்க வலியுறுத்தில் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் ஊராட்சி பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்க வில்லை என குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story