சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்
சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியில் உள்ள சிவானந்தபுரம் தெரு, சவுந்தரராஜபுரம் தெரு, அழகாபுரி தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வீதிகளில் குடிநீர் குழாய் இணைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் முடிந்து 5 மாதங்களாகியும் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story