புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்


புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்
x

புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்துவது என தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்

புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்துவது என தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதிய ஒப்பந்தம்

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் முடிவு செய்யப்படும். கடந்த 2019-ம் ஆண்டு மே 11-ந் தேதி போடப்பட்ட ஒப்பந்தம் இந்த மாதத்துடன் காலாவதியான நிலையில், கடந்த 6-ந் தேதி புதிய ஒப்பந்தம் குறித்த கூட்டம் நடந்தது.

மருத்துவ துணி உற்பத்தியாளர்கள், சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் முன்னிலையில் இ்ந்த கூட்டம் நடைபெற்றது.

100 பாய்ண்ட் மருத்துவ துணி உற்பத்திக்கு தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு ரூ.116.53-ம், அடுத்த ஆண்டு ரூ.122.77-ம், 3-ம் ஆண்டு ரூ.129.01-ம் வழங்க உற்பத்தியாளர்கள் ஒப்புதல் அளித்தனர். ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு 25 நாட்களாகியும் இதுவரை புதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை.

கஞ்சி தொட்டி

எனவே புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்துவது தொடர்பாக அனைத்து கட்சி மற்றும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மகாசபை கூட்டம் நடைபெற்றது. சங்கரபாண்டியபுரத்தில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட தொழிற் சங்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூலி உயர்வை அமல் படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய போராட்டங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் கூட்டத்தில் நடந்தது. வருகிற 5-ந் தேதி பல்வேறு இடங்களில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story