டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி போராட்டம்


டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி போராட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி போராட்டம் சிதம்பரத்தில் வருகிற 20-ந் தேதி போராட்டம் நடக்கிறது

கடலூர்

சிதம்பரம்

சிதம்பரத்தில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெற்றது. இதற்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், பொருளாளர் ராமச்சந்திரன், துணை செயலாளர் கற்பனைசெல்வம், கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாய சங்க துணை செயலாளர் காஜா மொய்தீன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அத்திப்பட்டு ஏ.ஆர்.ஏ.சரவணன் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிடவும், குறுவை சாகுபடி பயிர்களை பாதுகாத்திடவும், எதிர்வரும் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை உடனடியாக காவிரியில் திறந்து விட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைந்து நடத்தி முடித்து டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசின் அணைகளை காவிரி மேலாண்மை வாரியமே ஏற்று அணைகளில் இருந்து நீரை திறந்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தபால் அலுவலகத்தின் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story