பெண்ணின் உடலை வாங்க மறுத்து போராட்டம்


பெண்ணின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
x

கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி தேவி (35). இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், தேவியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தேவியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ராஜசேகரை கைது செய்யும்வரை, தேவியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவருடைய உறவினர்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். அதோடு ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த சுப்பிரமணி, வினோத், விஜயகுமார், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தேவியின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே ராஜசேகர் கேரளாவுக்கு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story