அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு


அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு
x

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், காலியாக இருந்த 62 இடங்களும் நிரப்பப்பட்டன.

திருப்பூர்

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், காலியாக இருந்த 62 இடங்களும் நிரப்பப்பட்டன.

அரசு கலைக்கல்லூரி கலந்தாய்வு

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை, அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. 13-ந் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

முதற்கட்ட கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரப்பப்பட்டிருந்த நிலையில் இளநிலை கலைப் பாடப்பிரிவுகளில் 17 இடங்கள், இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் 13 இடங்கள், இளநிலை வணிகவியல் பாடப்பிரிவுகளில் 32 இடங்கள் என மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.

2-ம் கட்ட கலந்தாய்வு

காலியாக இருந்த இந்த இடங்களை நிரப்புவதற்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. 2-ம் கட்ட கலந்தாய்வு குறித்த தகவல்களை கல்லூரியின் இணையதளத்திலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் 2-ம் கட்ட கலந்தாய்வு குறித்த குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.), தரவரிசைப் பட்டியலின்படி ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்குக் கல்லூரி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) பெறப்பட்ட மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் கலந்தாய்விற்கு அழைக்கப்படாத மாணவ, மாணவிகளும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்து கலந்தாய்வில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.

864 இடங்கள்

ஆனால் எஸ்.எம்.எஸ். மூலம் அழைக்கப்பட்டிருந்தவர்கள் மட்டுமே கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 62 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அனுமதிச்சான்று வழங்கப்பட்டது. இதை கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தெரிவித்தார். முதல் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வில் இளநிலை பட்டப்படிப்பு பாடப்பிரிவுகளில் நேற்றுடன் மொத்தம் உள்ள 864 இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்களும் கல்லூரிக்கு வந்திருந்தனர். கலந்தாய்வின் போது பெற்றோர்கள் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தனர்.


Related Tags :
Next Story