டேக்வாண்டோ போட்டியில் மாணவர்கள் சாதனை
டேக்வாண்டோ போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் டேக்வாண்டோ போட்டியில் மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற அச்சங்கத்தின் தலைவர் முருகநாதன் முயற்சி மேற்கொண்டார். அதன்படி பழனி வலசை அரசு உயர்நிலைப்பள்ளி, இலந்தை கூட்டம் அரசு பள்ளி, புகாரியா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஏபிசி கென்பிரிட்ஜ் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு சங்கத்தின் செயலாளரும் பயிற்சியாள ருமான ஆனந்தகுமார் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு, ராமநாதபுரம் சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இலந்தைக் கூட்டம், ஜமீந்தார் வலசை உள்ளிட்ட மாணவர் களுக்கு டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு இதில் 13 மாணவ-மாணவிகள் தேர்வு செய்து தென்காசி தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் 700 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட 6 மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர். இதில் ஜீவேஷ், இஷான் சக்தி, கிஷோர், தில்லை ஜீவா, கணிஷ், தர்ம மாதவன் உள்ளிட்டவர்கள் பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவர் பொறியாளர் முருகநாதன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து கூறினார். இந்த மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஆனந்தகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சித்தார்க் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மாணவர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஊராட்சி தலைவர் முஸ்தரி ஜஹான், ஊராட்சி செயலாளர் முனியசாமி ஆகியோர் பாராட்டினர்.