குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவர் தற்கொலை முயற்சி


குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவர் தற்கொலை முயற்சி
x

குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவர் தற்கொலைக்கு முயன்றார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பரத் (வயது 15). இவர் வெங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து, பொதுத்தேர்வு எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 500-க்கு 223 மதிப்பெண்கள் பெற்று பரத் தேர்ச்சி பெற்றார். இருப்பினும் அவர் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண் பெற்றதாகவும், இது தொடர்பாக பரத்திடம் நாகராஜ் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பரத் வீட்டில் வைத்திருந்த எறும்பு பவுடரை (விஷம்) தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story