பள்ளிகளில் மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை


பள்ளிகளில் மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை
x

பள்ளிகளில் மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை

திருப்பூர்

உடுமலை

கொரோனா தொற்று பரவல் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. அது தற்போது ஆங்காங்கு அதிகரித்து வருவதாகக்கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து பள்ளிகளில் மாணவ, மாணவிகள் முககவசம் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் முககவசம்அணிந்துவருகின்றனர். அத்துடன் இந்த பள்ளியில் மாணவிகள் பள்ளிக்கு வரும்போது, நுழைவு வாயில் பகுதியில், அவர்களது உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. இதை அந்தந்த மாணவிகளே பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் கருவி சுவற்றில் மாட்டிவைக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் வரிசையாக அங்கு வந்து, அந்த தெர்மல் ஸ்கேனர் கருவியில் வெப்பநிலை எவ்வளவு உள்ளது என்பதை பார்த்துச்செல்கின்றனர்.அத்துடன் மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்படுகிறது.இவற்றை பள்ளியின் தலைமையாசிரியை விஜயா முன்னிலையில் ஆசிரியைகள் கண்காணித்து வருகின்றனர்.


Next Story