விஷம் குடித்து மாணவர் தற்கொலை


விஷம் குடித்து மாணவர் தற்கொலை
x

விஷம் குடித்து மாணவர் தற்கொலை

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை அருகே மலையர்நத்தம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த பாபு மகன் பிரவீன்குமார் (வயது13). இவர் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சரியாக செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரவீன்குமார் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் பிரவீன்குமாரை மீட்டு உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story