தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை
மயிலாடுதுறையில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறையில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-1 மாணவர்
மயிலாடுதுறை தனியூர் வாணியத்தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் ரித்திஷ் (வயது 16). மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்த இவர், பொதுத்தேர்வு எழுதியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாணவன் ரித்திஷ் தேர்ச்சி பெறவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் ரித்திஷ் நேற்று முனதினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர் ரித்திஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
மாணவன் ரித்திஷின் தந்தை செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதால், தாயார் வேம்புவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். வேம்பு டீக்கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து தனது மகனை படிக்க வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.