10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக அண்ணனை பெற்றோர் கண்டித்ததால் பயத்தில் மாணவி திடீர் தற்கொலை
10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக அண்ணனை பெற்றோர் கண்டித்ததால், பயத்தில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக அண்ணனை பெற்றோர் கண்டித்ததால், பயத்தில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
10-ம் வகுப்பு மாணவி
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கையை அடுத்த ஆலங்குளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். விவசாயி. இவருடைய மகன் சபரீஸ்வரன் (வயது 15). அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார்.
இவருடைய தங்கை ஆதிகா சுபலெட்சுமி (14). அதே பள்ளியில் 9-ம் வகுப்பு முடித்து 10-ம் வகுப்பு செல்ல இருந்தார்.
நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதில் சபரீஸ்வரன் குறைவான மதிப்பெண் பெற்றதாக பெற்றோர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மாணவி ஆதிகா சுபலெட்சுமி மனவருத்தம் அடைந்தார்.
தானும் 10-ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றால், பெற்றோர் இவ்வாறு கண்டிப்பார்களோ என்று பயந்துள்ளார். இந்த நிலையில், ஆதிகா சுபலெட்சுமி திடீெரன துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சோகம்
அவரது இந்த விபரீத முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து கதறினர். இதுகுறித்து தந்தை ராஜ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் திருஉத்தரகோசமங்கை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவியின் இந்த துயர முடிவு சோகத்தை ஏற்படுத்தியது.