விஷம் குடித்து மாணவி தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
தேனி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சிவபாண்டியன் மகள் தேசிகா (வயது 15). ராஜதானி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 மாதமாக தேசிகா வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த தேசிகா கடந்த மாதம் 27-ந்தேதி விஷம் குடித்து மயங்கி கி்டந்தார். இதையடுத்து அவரை, பெற்றோர் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 5-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story