மாணவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


மாணவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

குளச்சலில் மாணவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

குளச்சல்,

இளைஞர்களுக்கு வேலை வழங்க கேட்டும், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் குமரி கிழக்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரபின் ஜெபக்குமார் தலைமை தாங்கினார். குளச்சல் தொகுதி மாணவர் காங்கிரஸ் தலைவர் டோமினிக் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பிரின்ஸ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மாநில பொதுச்செயலாளர் ஜார்ஜ் ராபின்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன் கிறிஸ்டா, தொகுதி தலைவர் ரெஜின், எபின், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், கிழக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின், துணைத்தலைவர் லாலின் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story