மாணவியர் பேரவை தொடக்க விழா
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் பூங்கொடி வரவேற்றார். கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் சாந்தகுமாரி கலந்துகொண்டு மாணவியர் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் சாத்தான்குளம் கல்விக்கழக தலைவர் சுப்பிரமணியம், துணைத்தலைவர் லெட்சுமி நாராயணன், செயலர் ஜெயபிரகாஷ், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் பாலமேனன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தினர். வணிக நிர்வாகவியல் பேராசிரியை சண்முகசுந்தரி நன்றி கூறினார் விழா நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை பேராசிரியை சீதாலெட்சுமி தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியை நீமா தேவ் பொபீனா மற்றும் முனைவர் ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.