மாணவியர் பேரவை தொடக்க விழா


மாணவியர் பேரவை தொடக்க விழா
x

தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.

மதுரை

கீழக்கரை,

கீழக்கரையில் உள்ள தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா மற்றும் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குனர் இர்பான் அஹமது வாழ்த்துரை வழங்கினார். மாணவி பேரவையின் ஆலோசகர் சுரையா பாத்திமா பேரவை உறுப்பினர்களை அறிமுகம் செய்தார்.இளம் அறிவியல் விஞ்ஞானி விருதை மாணவி பவ்யா தேவிக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் ஆமினா ஆசிபா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்-அமைச்சர் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கி பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். மாணவிகளுக்கு பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு பேராசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களையும் நவாஸ்கனி எம்.பி. கூறினார். முடிவில் மாணவியர் பேரவையின் தலைவி செகனாஷ் பானு நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூத் கான் மற்றும் மாணவியர் பேரவையினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story