கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
கிணற்றில் மூழ்கி மாணவன் பலியானார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலாபுரம் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் கோட்டைமலை (வயது 16). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் தீபாவளியன்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் மூச்சு திணறி கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து மாணவனின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story