நெல்லை பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை


நெல்லை பல்கலைக்கழக  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
x

நெல்லை பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, நாகம்பட்டி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம். இளங்கலை படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள்ளும், முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள்ளும் ஆகும். மாணவர்கள் சேர்க்கை விதிகள் தமிழக அரசு ஆணைக்கு இணங்க செயல்படுத்தப்படும்.

இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு)சுந்தரகண்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story