ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x

ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தான்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் கும்பாரப்பேட்டை அருகே ஜாபர் தெருவை சேர்ந்தவர் நசீர் பாஷா. இவருடைய மகன் முகமது ஜாக்குவன் (வயது 14). இவன், ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த மாணவர், சானசந்திரம் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story