கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரியில் கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனக் கூறி நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சப்-கலெக்டர் லூர்துசாமி, தாசில்தார் அந்தோணிராஜ், கல்லூரி முதல்வர் ராஜவேலு ஆகியோர் நேரில் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story