10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
குறைந்த மதிப்பெண் எடுத்ததால் 10-ம் வகுப்பு மாணவி விஷத்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
மாரண்டஅள்ளி
10-ம் வகுப்பு மாணவி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அமானி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் நிவேதா (15). இவர் அமானி மல்லாபுரம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.
கடந்த 20-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் நிவேதா குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் கடும் மன வேதனையில் இருந்தார். இதையடுத்து கடந்த 21-ந் தேதி காலையில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து சாப்பிட்டார். பிறகு தன் தாய் ஷர்மிளாவிடம் இது பற்றி அவர் தெரிவித்தார்.
சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த நிவேதாவின் பெற்றோர் மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை மாணவி நிவேதா இறந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.